Monday, August 9, 2021

ஆட்டு ஈரல் தொக்கு

 











தேவையான பொருட்கள் :


ஆடு ஈரல் - 1/2 கிலோ

எண்ணெய் - 3 தேக்கரண்டி

இலவங்கப்பட்டை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

உப்பு - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 5

கொத்தமல்லி இலைகள் - 1/4 கை

புதினா இலைகள் - 1/4 கை

தயிர் - 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி


செய்முறை :


கடாய் வைத்து எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதக்கினால் போதுமானது.


பின் சுத்தம் செய்த ஈரலை சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக மஞ்சள் சேர்த்து பிரட்டிக்கொண்டே இருங்கள். இதனால் ஈரலின் வாடை போய்விடும். அடுப்பு சிறு தீயில் இருக்க வேண்டும்.


அடுத்ததாக தக்காளி மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து வதக்கிவிட்டு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.


10 நிமிடங்கள் அப்படியே மூடிவிட்டு திறக்க தண்ணீர் நிறைந்திருக்கும். அப்போது கிளறி விட்டு மீண்டும் மூடி விடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து திறந்து சீரகத்தூள் சேர்க்க வேண்டும்.

பின் மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்து இறக்கி விடவும் 

மணத்தக்காளி வத்த குழம்பு

 













தேவையான பொருட்கள் :


மணத்தக்காளி வத்தல் - 25 கிராம்

சின்ன வெங்காயம் -5

பூண்டு - 7 பற்கள்

தக்காளி - 1

கடுகு - 1/4 tsp

கடலைப்பருப்பு - 1/4 tsp

வெந்தயம் - 1/4 tsp

காய்ந்த மிளகாய் - 2,

புளி - ஒரு எலுமிச்சை அளவு,

குழம்பு மிளகாய் தூள் - 3 tsp

கறிவேப்பிலை - சிறிதளவு,

நல்லெண்ணெய் - 4 tbsp

உப்பு - சிறிதளவு


செய்முறை :


முதலில் கடாய் வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் சேருங்கள். சூடானதும் கடுகு, 

வெந்தயம், காய்ந்தமிளகாய் கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்.

பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். அதோடு  மணத்தக்காளி வத்தலையும் 

சேர்த்து வதக்குங்கள். 

10 நிமிடங்கள் கழித்து தக்காளி சேருங்கள்.

அடுத்ததாக மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளி கரைசலை சேருங்கள். போதுமான அளவு உப்பு சேர்த்து தட்டுபோட்டு மூடிவிடுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்து இறக்கிவிடவும் ..


Saturday, July 17, 2021

நண்டு மசாலா

 












தேவையான பொருட்கள்

நண்டு – 1/2 கிலோ

வெங்காயம் – 2 பொடியாக

தக்காளி – 2 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பிரியாணி இலை – 1

பட்டை – 1

ஏலக்காய் – 4

சோம்பு – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு


அரைப்பதற்கு

துருவிய தேங்காய் – 1 கப்

சோம்பு – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

பூண்டு – 10 பல்


 செய்முறை:


முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின் அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.

பின் தக்காளியை சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும் .

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கவும்.

பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை கிளறிவிடவும்.

பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கவும் ..

வாத்துக்கறி குழம்பு












தேவையான பொருட்கள்

வாத்துக்கறி – ½ கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 6

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 5 ஸ்பூன்

பிரியாணி இலை -  2

மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் –தேவையான அளவு  


அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – ¼ கப்

சீரகம் - 1 ஸ்பூன்

வெங்காயம் - 4

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

மல்லித் தூள் – ½ ஸ்பூன்

தக்காளி - 1

பட்டை – 1

கிராம்பு - 2

சோம்பு – ½ ஸ்பூன்


செய்முறை

முதலில் வாத்துக் கறியை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின் பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி  தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய தேங்காய், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயம், மல்லித்தூள், சீரகம் ஆகிய அனைத்தையும் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 

பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி விடவும்.

நன்கு வதங்கிய பிறகு வாத்துக்கறியை போட்டு நன்கு வதக்கவும்.

கறி வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

கறி வெந்து குழும்பு சுண்டி வரும்போது அரைத்த வைத்துள்ள தேங்காய் விழுதைப் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து குழும்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் ..

ஸ்பெஷல் மட்டன் கிரேவி

 














தேவையான பொருட்கள்:



மட்டன் - 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)

தக்காளி - 2 (அரைத்தது)

வெங்காயம் - 2 (அரைத்தது)

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தயிர் - 1 கப்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

பட்டை மற்றும் கிராம்பு பொடி - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)


செய்முறை:


முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு மிதமான தீயில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர்  மட்டனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்கவும் 


சுறா புட்டு










தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கிலோ

வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )

பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி – 1 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் – 3 ( பொடியாக நறுக்கியது )

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லி தூள் – ½ ஸ்பூன்

மிளகு தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடுகு – ½ ஸ்பூன்


செய்முறை

முதலில் சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை நீக்கி கழுவி பின் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்த சுறா மீனை நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.

இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.

மீனின் தோலை நன்கு சுத்தம் செய்து எடுத்து விட்டு மீனை 2 முறை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.

மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும்.

இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.

அரை மணி நேரம் ஆன பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும்  கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.

10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.

இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிவிடவும் ..

மட்டன் குடல் குழம்பு











தேவையான பொருட்கள்

ஆட்டு கறி குடல் - 500 கிராம்

வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல்  – 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 2

சோம்பு – 1 ஸ்பூன்

கசகசா – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )


செய்முறை

முதலில் ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.

ஆட்டுக் குடலை சுத்தம் செய்யும் போது சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வரும் வரை வதக்கவும்.

வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வர நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்க்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இப்போது சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துள்ள ஆட்டு குடலை இத்துடன் சேர்க்கவும்.

ஆட்டுக் குடலை சேர்த்து நன்கு வதக்கவும்

ஆட்டுக் குடலுடன் மசாலா நன்கு சேரும் வரை வதக்கி விடவும்.

ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த தேங்காய் மசாலாவை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பின் இறக்கவும் ..

யாழ்ப்பாண மீன் குழம்பு

 











தேவையான பொருட்கள்

மீன் - 500 -கிராம் 

தக்காளிப் பழம் - 2  

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 2

பூண்டு – 10 பல்   

இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்  

புளிக் கரைசல் - 1/2 கப்

கடுகு – 1ஸ்பூன்  

பெருஞ்சீரகம் - ½ ஸ்பூன் 

வெந்தயம் – 1ஸ்பூன்  

மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்  

மிளகாய் தூள் - 3 ஸ்பூன்  

உப்பு - தேவையான அளவு 

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு  

தேங்காய் பால் - 1 கப் 

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தயிர் – 1 ஸ்பூன் 

சீரகம்,மிளகு,பூண்டு அரைத்து - 1 ஸ்பூன்  

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை

முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது 

சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து  சூடானதும் கடுகு, சீரகம்,வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் பூண்டு, கறிவேப்பிலை,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

வதங்கியதும் மிளகாய் தூள் ,உப்பு,கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் மீனை சேர்க்கவும்.

மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து மூடி விடவும்.

மீன் வெந்து குழம்பு நன்கு கெட்டி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் ...


மாங்கா‌ய் ‌மீ‌ன் குழ‌ம்பு

 













தேவையான பொருட்கள் :


மீன் - அரை கிலோ

புளி - சிறிதளவு

பெ.வெங்காயம் - 5

தக்காளி - 4

மா‌ங்கா‌ய் - 1

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - சிறிதளவு

க‌றிவே‌ப்‌பிலை - சி‌றிதளவு


செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

மீன்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

கரைத்த புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போட்டு கிளறிவிடவும்.

பின்னர் மாங்காய் துண்டுகளை போடவும்.

மீன் துண்டுகள் நன்கு வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கிவிடவும் .

மலபார் சிக்கன் ரோஸ்ட்

 













தேவையான பொருட்கள்:

சிக்கன்  -  500 கிராம் 

சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோள மாவு - 2 டீஸ்பூன்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

எலுமிச்சை - 1


செய்முறை:

முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் நன்றாக சிவக்கும் படி பொரிக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும் .

Tuesday, December 15, 2020

கோரி ரொட்டி சிக்கன் கிரேவி












தேவையான பொருட்கள்: 


சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)

 வெங்காயம் - 1 (நறுக்கியது) 

தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)

 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்

 சீரகம் - 1 டீஸ்பூன் 

மல்லி தூள் - 1 டீஸ்பூன் 

பட்டை - 1 

கிராம்பு - 3 

ஏலக்காய் - 3 

வரமிளகாய் - 4 

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை:

 முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். 

பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் 

துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி 

வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து 

நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும். 

பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும். மசாலா கொதித்ததும், 

அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, 

மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.


பெப்பர் சிக்கன் கிரேவி






தேவையான பொருட்கள்: 


* சிக்கன் - 500 கிராம்

 * தேங்காய் எண்ணெய் - 1/4 கப் 

* பிரியாணி இலை - 1 

* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

 * பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

 * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

 * தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) 

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

 * மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 

* கரம் மசாலா - 2 டீஸ்பூன் 

* உப்பு - தேவையான அளவு

 * கொத்தமல்லி - சிறிது 


வறுத்து அரைப்பதற்கு... 


* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

 * சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் 

* பட்டை - 1 துண்டு 

* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

 * மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

 * வெங்காயம் - 1 (நறுக்கியது) 


செய்முறை:


 * முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

 * பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சிக்கனைப் போட்டு, 

சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், 

அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலாப் பொருட்களை சேர்த்து வறுத்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கி, ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 

* அதன் பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். 

* பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி விடவும்.

 * இப்போது வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ...


Monday, July 20, 2020

மட்டன் ஈரல் மசாலா























தேவையான  பொருட்கள்: 

மட்டன் ஈரல் -1/2 kg 
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
சோம்பு -1  ஸ்பூன்
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
மிளகாய் தூள்-2   ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
மிளகுத் தூள் -1  ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா -1  ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் -4 

செய்முறை:
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை  சிறிதாக  நறுக்கிக் கொள்ளவும்
குக்கரில் ஈரல் உப்பு, மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் . 1  டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வேகவிடவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கவும்
வேக வைத்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும் நன்கு  வதங்கியதும் 
மிளகுத்தூள் சேர்த்து  கிளறி இறக்கவும் ...